புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 8 July 2020 11:00 AM IST (Updated: 8 July 2020 11:00 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி, மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் மாநில அரசு, சுகாதாரத்துறை மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று வரை மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,039 ஆக இருந்தது.

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் மேலும் 112 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,151 ஆக உயர்ந்துள்ளது. 

தற்போது வரை 553 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் 584 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சையில் இருப்பவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. கொரோனாவால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story