தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது - மத்திய இணை அமைச்சரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்


தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது - மத்திய இணை அமைச்சரிடம் முதலமைச்சர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 July 2020 1:29 PM IST (Updated: 8 July 2020 1:29 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று மத்திய இணை அமைச்சரிடம் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

மத்திய எரிசக்தி துறை இணை அமைச்சர் ஆர்.கே சிங் இன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தமிழகம் வருகை தந்தார். தமிழகம் வந்த எரிசக்தி துறை இணை அமைச்சர் ஆர்.கே.சிங், முதல் அமைச்சர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது, தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று முதல் அமைச்சர் பழனிசாமி மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினார். மேலும்,  வீட்டு உபயோகத்திற்கான 100 யூனிட் இலவச மின்சாரமும் தொடர்ந்து வழங்கப்பட வகை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.


Next Story