கொரோனா பாதிப்பு எதிரொலி; விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் பட்டாசு ஆலைகள் மூடல்
விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் பட்டாசு ஆலைகளை மூட பட்டாசு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் விருதுநகரில் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது வரை 164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,416 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 548 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக, விருதுநகரில் நாளை முதல் பட்டாசு ஆலைகளை மூட பட்டாசு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. நாளை முதல் வரும் 19ஆம் தேதி வரை பட்டாசு ஆலைகள் மூடப்படும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Related Tags :
Next Story