கன்னியாகுமரி மீனவர்கள் கேரளாவில் நுழைய அனுமதி அளிக்க வேண்டும் - கேரள முதல்வருக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
கன்னியாகுமரி மீனவர்கள் கேரளாவில் நுழைவதற்கு அனுமதி அளிக்கக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
குமரி மேற்கு கடற்கரை பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கேரள மாநிலத்தில் தங்கியிருந்து மீன்பிடிப்பது வழக்கம். தற்போது மீன்பிடி தடை காலம் ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கேரள அரசு மீன்பிடிக்க தடை விதித்துள்ளது. மேலும் கடுமையான ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதனால் குமரி மாவட்ட மீனவர்கள் கேரளாவுக்கு செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கன்னியாகுமரி மீனவர்கள் கேரளாவில் நுழைவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கேரளாவில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளை பழுது பார்ப்பதற்கு கன்னியாகுமரி மீனவர்களுக்கு அனுமதி தர வேண்டும் எனவும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மீனவர்கள் கேரளாவில் மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Related Tags :
Next Story