விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பாதைகளை அமைப்பதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்


விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பாதைகளை அமைப்பதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்
x
தினத்தந்தி 9 July 2020 12:45 AM IST (Updated: 9 July 2020 12:31 AM IST)
t-max-icont-min-icon

விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பாதைகளை அமைப்பதா? என டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டம் இருகூரில் இருந்து கர்நாடகத்தின் தேவனகொந்தி நகருக்கு எரிபொருள் கொண்டு செல்வதற்காக தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் உள்ள விளை நிலங்கள் வழியாக எண்ணெய்க்குழாய் பாதை அமைக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயல்வது கண்டிக்கத்தக்கது.

இந்த திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறுவதாக இருந்த மக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதே திட்டத்தை கோவை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக செயல்படுத்தினால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதை விடுத்து விளைநிலங்கள் வழியாக எண்ணெய்க்குழாய் பாதைகளை அமைக்க பாரத் பெட்ரோலிய நிறுவனம் துடிப்பதும், அதற்கு மத்திய, மாநில அரசுகள் ஆதரவாக இருப்பதும் நியாயமற்றவை. மத்திய, மாநில அரசுகள் இந்த நிலையை மாற்றிக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story