கொரோனாவால் இறப்பவர்களின் உடல் அடக்கம் விதிமுறைகளை தாக்கல் செய்யவேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு


கொரோனாவால் இறப்பவர்களின் உடல் அடக்கம் விதிமுறைகளை தாக்கல் செய்யவேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 July 2020 3:15 AM IST (Updated: 9 July 2020 3:02 AM IST)
t-max-icont-min-icon

சென்னையின் நரம்பியல் டாக்டர் சைமன் ஹெர்குலஸ் கொரோனாவால் மரணமடைந்தார்.

சென்னை,

சென்னையின் நரம்பியல் டாக்டர் சைமன் ஹெர்குலஸ் கொரோனாவால் மரணமடைந்தார். இவரது உடலை அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்துக்கு கொண்டு சென்ற போது அந்த பகுதியில் வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழலை தொடர்ந்து டாக்டரின் உடல் வேலாங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது. டாக்டரின் உடல் அடக்கத்தை எதிர்த்து வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அதேநேரம், இந்த சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் காணொலி காட்சி மூலம் நேற்று விசாரித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வகுத்துள்ள விதிமுறைகளை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு (வெள்ளிக்கிழமை) தள்ளிவைத்தனர்.

Next Story