அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடப்பாடி பழனிசாமி, 13-ந்தேதி தொடங்கி வைக்கிறார்


அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடப்பாடி பழனிசாமி, 13-ந்தேதி தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 9 July 2020 5:06 AM IST (Updated: 9 July 2020 5:06 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன.

சென்னை,

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. ஆன்லைனில் வகுப்புகளை தனியார் பள்ளிகள் உள்பட பல கல்வி நிறுவனங்கள் தொடங்கி விட்டன. இதன் தொடர்ச்சியாக அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க அரசு திட்டமிட்டு இருக்கிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எப்படி நடத்தப்படும்? என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

ஆன்லைன் வகுப்புகள் என்று சொன்னது கல்வி தொலைக்காட்சி சேனல் வழியாக நடத்தப்படுவது ஆகும். கல்வி தொலைக்காட்சி மட்டும் அல்லது, தந்தி, பாலிமர், புதிய தலைமுறை மற்றும் பொதிகை தொலைக்காட்சிகளிலும் வகுப்புகள் ஒளிபரப்பப்பட உள்ளன.

ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் தினமும் சில குறிப்பிட்ட நேரங்கள் ஒதுக்கப்பட்டு, சில வகுப்புகளுக்கான பாடங்கள் அதன்மூலம் ஒளிபரப்ப திட்டமிட்டு இருக்கிறோம். பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் லேப்டாப் இருப்பதால், அவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் பதிவிறக்கம் செய்து வழங்கப்படும். கேள்வி கேட்பது மட்டும் வாரத்துக்கு ஒரு முறை நடக்கும்.

இதற்கான கால அட்டவணை தயாராகி வருகிறது. இந்த திட்டத்தைதான் வருகிற 13-ந்தேதி முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story