வாடகை கேட்டதால் ஆத்திரம்- வீட்டு உரிமையாளர் குத்திக்கொலை


வாடகை கேட்டதால் ஆத்திரம்- வீட்டு உரிமையாளர் குத்திக்கொலை
x
தினத்தந்தி 9 July 2020 8:18 AM IST (Updated: 9 July 2020 8:21 AM IST)
t-max-icont-min-icon

சென்னை குன்றத்தூரில் வீட்டு வாடகை கேட்ட உரிமையாளர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

சென்னை அருகே குன்றத்தூர்  பகுதியில் வாடகை கேட்டதால் வீட்டு உரிமையாளர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குணசேகர் என்பவருக்கு சொந்தமான வீட்டில் அஜித் என்ற இளைஞர் வாடகைக்கு குடியிருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 4 மாதங்களாக வாடகை கொடுக்காததால்,  வீட்டின் உரிமையாளர் குணசேகர், அஜித் என்ற இளைஞரிடம் வாடகை கேட்டதாக தெரிகிறது.  இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞர் அஜித், வீட்டின் உரிமையாளர் குணசேகரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

இதையடுத்து, இளைஞர் அஜித்தை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story