சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு


சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் மனு
x
தினத்தந்தி 9 July 2020 10:57 AM IST (Updated: 9 July 2020 11:00 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் காவல்துறை தாக்கியதில் தந்தை மகன் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், சிபிஐ-யும் இரு வழக்குப்பதிவை செய்துள்ளது. இன்னும் சில தினங்களில் சிபிஐ தனது விசாரணையை தொடங்கும் என்று தெரிகிறது.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும்  காவலர்கள் முருகன், முத்துராஜா  உள்பட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 8 போலீசார் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி முதன்மை நீதிமன்றத்தில் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு காணொலி வாயிலாக விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. 

Next Story