மாவட்ட ஆட்சியர்களுடன் மத்தியக் குழு இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை
மாவட்ட ஆட்சியர்களுடன் மத்தியக் குழு இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனை நடத்துகின்றனர்.
சென்னை,
தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா தொற்று பரவி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தையே எட்டி வருகிறது.
தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக மத்திய சுகாதார துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில் மத்திய குழு தமிழகம் வந்துள்ளது. இக்குழுவில் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திர ரத்னு உள்ளிட்ட 7 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் 3 வது முறையாக தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் மத்தியக் குழு இன்று மாலை 4 மணிக்கு தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகின்றனர்.
முன்னதாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை சென்ற மத்தியக் குழு, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story