கொரோனா பாதித்த கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் குணமடைந்தார்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோவை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் குணமடைந்து வீடு திரும்பினார்.
கோவை,
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் மக்கள் பிரதிநிதிகளும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் கோவை சிங்கா நல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம், எம்.எல்.ஏவின் மகள், மருமகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்கள் அனைவருக்கும் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்களது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து இன்று எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர்கள் அனைவருக்கும் தற்போது கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து அம்மன் அர்ஜூனனும், அவரது குடும்பத்தினரும் வீடு திரும்பியுள்ளனர்.

Related Tags :
Next Story