சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பென்னிக்ஸின் நண்பர்களிடம் மீண்டும் விசாரணை


சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பென்னிக்ஸின் நண்பர்களிடம் மீண்டும் விசாரணை
x
தினத்தந்தி 9 July 2020 5:57 PM IST (Updated: 9 July 2020 5:57 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பென்னிக்ஸின் நண்பர்களிடம் மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து தூத்துக்குடியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை காவல்துறையைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பென்னிக்ஸின் 5 நண்பர்களிடம் மீண்டும் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். மேலும் அரசு சாட்சியாக மாறியுள்ள காவலர் ரேவதியும் விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறார். இதுவரை 20 பேருக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பென்னிக்ஸின் நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, மீண்டும் இன்று இரண்டாம் கட்டமாக அவர்கள் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக மாஜிஸ்திரேட்டிடம் சாட்சியம் அளித்த தலைமை காவலர் ரேவதியும் இன்று இரண்டாவது முறையாக தூத்துக்குடியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.

Next Story