மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல் + "||" + Coronavirus confirmed to 4,231 people in Tamil Nadu today - Health Department

தமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது.


சென்னையில் இன்று 1,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,728 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையை அடுத்துள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு மாவட்டத்திலின்று 169 பேருக்கும், திருவள்ளூரில் 364 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 67 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர பிற மாவட்டங்களில் அதிகபட்சமாக மதுரையில் 262 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 254 பேருக்கும், தூத்துக்குடியில் 196 பேருக்கும், திருநெல்வேலியில் 110 பேருக்கும் கொரோனா தொர்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 65 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 43 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 22 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,765 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 3,994 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78,161 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது 46,652 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 42,369 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 14,91,783 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் ரூ.9.66 கோடியில் நடமாடும் ரேசன் கடைகள் - அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி, தமிழகத்தில் ரூ.9.66 கோடியில் நடமாடும் ரேசன் கடைகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
2. தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில்தான் கூட்டணி: வி.பி.துரைசாமி பரபரப்பு பேட்டி
தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் அமையும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று வி.பி.துரைசாமி பரபரப்பு கருத்துகளை தெரிவித்து உள்ளார்.
3. தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் - தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்
தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.
4. தமிழகத்தில் இன்று முதல் மாநகராட்சி பகுதிகளில் கோவில்கள் திறப்பு
இன்று முதல் தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சி எல்லைப் பகுதிகளில், 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் வரும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன.
5. தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை தகவல்
தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.