சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி
சென்னையில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
கொரோனா பரவல் காரணாமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் சென்னையில் தகவல் தொழில்நுட்ப்ப நிறுவனங்கள் இயங்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு காலத்தில் பல தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே கணிணி மூலமாக பணி செய்யுமாறு அறிவுறுத்தியது.
இந்நிலையில் தற்போது சென்னையில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தனியார் நிறுவனங்கள் இயங்க அரசு அனுமதி அளித்து வருகிறது. அதன்படி சென்னையில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சில கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சம் 10 சதவீதம் பணியாளர்கள் மட்டும் வரவழைத்து நிறுவனங்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிர்வாகமே அவர்களுக்கு வாகன வசதி செய்து தரவேண்டும் எனவும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நிபந்தனைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது .

Related Tags :
Next Story