கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து195 கர்ப்பிணிகள் மீண்டனர் 107 பேருக்கு குழந்தை பிறந்தது


கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து195 கர்ப்பிணிகள் மீண்டனர் 107 பேருக்கு குழந்தை பிறந்தது
x
தினத்தந்தி 10 July 2020 3:04 AM IST (Updated: 10 July 2020 3:04 AM IST)
t-max-icont-min-icon

பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு முதலில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

சென்னை,

கொரோனாவின் பிடியில் கர்ப்பிணி பெண்களும் சிக்கி வருகின்றனர். எனவே பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு முதலில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன் பின்னரே மற்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது.

அந்தவகையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இதுவரை 210 கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சைக்கு பின்னர் 195 கர்ப்பிணி பெண்கள் பூரண குணமடைந்தனர். தற்போது 107 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது. பரிசோதனையில் குழந்தைகளுக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்று தெரிய வந்து உள்ளது. டாக்டர்களின் தன்னலமிக்க சேவையினால் தாயும், சேயும் காப்பாற்றப்பட்டு உள்ளனர் என்று மருத்துவமனை டீன் டாக்டர் வசந்தாமணி தெரிவித்தார்.

Next Story