தமிழ்நாடு ஹஜ் குழு தலைவராக கோவை அப்துல் ஜப்பார் தேர்வு - தமிழக அரசு அறிவிப்பு


தமிழ்நாடு ஹஜ் குழு தலைவராக கோவை அப்துல் ஜப்பார் தேர்வு - தமிழக அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 10 July 2020 6:25 AM IST (Updated: 10 July 2020 6:25 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு ஹஜ் குழு தலைவராக கோவை அப்துல் ஜப்பாரை தேர்வு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஹஜ் குழு சட்டப்படி தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவில் 12 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர். தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் முதல் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள பொதுப்பணித்துறை கூட்ட அரங்கில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவராக கோவை யுனைடெட் ஜமாத் பொதுச்செயலாளர் ஏ.அப்துல் ஜப்பார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுகுறித்த அரசாணை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story