கொரோனா பாதிப்பு : சென்னையில் 20,271 பேருக்கு சிகிச்சை ; 52,287 பேர் குணமாகியுள்ளனர்


கொரோனா பாதிப்பு : சென்னையில் 20,271 பேருக்கு சிகிச்சை ; 52,287 பேர் குணமாகியுள்ளனர்
x
தினத்தந்தி 10 July 2020 1:19 PM IST (Updated: 10 July 2020 1:19 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மொத்தம் 20,271 பேருக்கு கொரோனா சிகிச்சை பெற்றுவருகின்றனர். 52,287 பேர் இதுவரை குணமாகியுள்ளனர்.

சென்னை

தலையில் கட்டி இருந்து ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஒன்றரை வயது குழந்தைக்கு கடந்த 29-ம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, குழந்தைக்கு தொடர்ந்து அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் குழந்தை நள்ளிரவில் உயிரிழந்தது. இது தவிர, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 8 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேரும் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். கொரோனா பாதித்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருந்த கோடம்பாக்கத்தை சேர்ந்த 63 வயது முதியவரும் உயிரிழந்தார்.

சென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50ஆயிரத்தை கடந்தது.சென்னையில் கொரோனாவில் இருந்து 52,287 பேர் இதுவரை குணமாகியுள்ளனர்.சென்னையில் கொரோனாவுக்கு 20,271 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.சென்னையில் கொரோனாவுக்கு இதுவரை 1169 பேர் பலியாகியுள்ளனர்

சென்னையில் மொத்தம் 20,271 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

கோடம்பாக்கம்- 2553

அண்ணா நகர்-2236

தேனாம்பேட்டை-2036

ராயபுரம்- 1582

திரு.வி.க நகர்- 1538

அம்பத்தூர்- 1243

வளசரவாக்கம்- 1051

அடையாறு- 1263

திருவொற்றியூர்- 957

மணலி- 396

மாதவரம்- 712

தண்டையார்பேட்டை -1522


Next Story