மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு மதிப்பூதியம் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு + "||" + Cancel the special honorarium paid to civil servants - Government Notice

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு மதிப்பூதியம் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு மதிப்பூதியம் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு
சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த காலகட்டத்தில் அரசு செலவுகளைக் குறைக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


இந்நிலையில் சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக நிதித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், கொரோனா காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே வழங்கப்பட்ட மதிப்பூதியம் திரும்பப் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கொரோனா தடுப்பு பணியின்போது இறந்தால் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்பது உள்பட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. அரசு ஊழியர்களுக்கான புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்ப்பு
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
3. அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கம்; உரிய கட்டணத்தை செலுத்தி சென்றனர்
அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்வதற்காக நேற்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் அவர்கள் உரிய கட்டணத்தை செலுத்தி சென்று வந்தனர்.
4. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்லசிறப்பு பஸ்கள் இயக்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
5. கடலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்ல சிறப்பு பஸ்கள்
கடலூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேலைக்கு சென்று வர இன்று (புதன்கிழமை) முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுதொடர்பாக கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-