டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்வு


டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்வு
x
தினத்தந்தி 12 July 2020 1:49 AM GMT (Updated: 12 July 2020 1:49 AM GMT)

பெட்ரோல் விலையில், 14-வது நாளாக எந்த மாற்றமும் இல்லை. டீசல் விலை 10 காசுகள் உயர்ந்துள்ளது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணையித்துக் கொள்கின்றன. கொரோனா ஊரடங்கால் எரிபொருள் தேவை கணிசமாகக் குறைந்ததால், ஆரம்ப கட்ட ஊரடங்கின் போது விலை ஏற்றம் இதுவும் இன்றி இருந்தது.

தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், படிப்படியாக பொருளாதார நடவடிக்கைகள் மீண்டு வருகின்றன. இந்த நிலையில், டீசல் விலை இன்று லிட்டருக்கு 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு லிட்டர் டீசல் ரூ.  78.01 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் ரூ.83.63 ஆக விற்பனையாகிறது. பெட்ரோல் விலை கடந்த 14-நாட்களாக மாற்றம் எதுவும் இன்றி விற்பனையாகிறது.


Next Story