சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: மேலும் 5 போலீசார் பணியிடை நீக்கம்


சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: மேலும் 5 போலீசார்  பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 12 July 2020 12:31 PM IST (Updated: 12 July 2020 12:39 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்களில் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடை திறந்து வைத்ததாக கூறி போலீசார் அழைத்து சென்று தாக்கினார்கள். பின்னர் கோவில்பட்டி ஜெயிலில் அடைக்கப்பட்ட 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.  இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசாரை கைது செய்தனர்.

மேலும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாத்தான்குளம் போலீஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, கோவில்பட்டி ஜெயிலில் விசாரணை நடத்தி பல்வேறு ஆவணங்களை சேகரித்தனர்., இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதன்படி, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.  

இதற்கிடையே, இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை,  காவலர்கள், சாமதுரை, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸிஸ், வெயிலுமுத்து ஆகிய 5 பேரையும்  பணியிடை நீக்கம் செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

Next Story