துரிதமாக செயல்பட்டு அரசின் கோப்புக்களை முடிக்க வேண்டும் - அரசு ஊழியர்களுக்கு உத்தரவு


துரிதமாக செயல்பட்டு அரசின் கோப்புக்களை முடிக்க வேண்டும் - அரசு ஊழியர்களுக்கு உத்தரவு
x
தினத்தந்தி 13 July 2020 12:35 PM IST (Updated: 13 July 2020 12:35 PM IST)
t-max-icont-min-icon

50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படுவதால் துரிதமாக செயல்பட்டு அரசின் கோப்புக்களை முடிக்க வேண்டும் என அரசு ஊழியர்களுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை

கொரோனா காரணமாக 50 சதவீத  ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் நடைபெறும் சாலை, கால்வாய், கட்டிடங்கள், குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் பொறியாளர்கள் மூலம் அளவீடு புத்தகம் தயாரித்து, கோப்புகளை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த வளர்ச்சி பணிகளை மேல் அளவீடு செய்து ஊரக வளர்ச்சி துறை உதவி  செயற்பொறியாளர் நேரில் சென்று பார்வையிட்ட பிறகு, பணிகளுக்கான காசோலை வழங்க அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

தற்போது பல்வேறு ஒன்றியங்களில் நிறைவடைந்த பணிகளை உதவி செயற்பொறியாளர் மேல் அளவீடு செய்யாமல் அதிகாரிகள் பணிகளை இழுத்தடித்து வருவதாகவும், நிறைவடைந்த பணிகளுக்கு ஜெடிஓ, உதவி செயற்பொறியாளர் பார்வைக்கு  கொண்டு செல்லாமல் அலைக்கழிப்பதாகவும் ஒப்பந்ததாரர்கள் புலம்பி வருகின்றனர். மேலும், பல லட்சங்கள் வட்டிக்கு கடன் வாங்கி பணிகள் செய்து கொடுப்பதாகவும், நிறைவடைந்த பணிகளுக்கு பணம் வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.   இதனைபோல், தமிழகத்தில் பாரத பிரதமரின் வீட்டு வசதி திட்டம் (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா) கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. இந்த திட்டத்தில் மாநில அளவில் ஏழை, நடுத்தர மக்கள் வீடு கட்ட மானியம்  வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசின் முழு நிதியும் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டாக PMAY திட்டத்தில் வீடு கட்டுவது ஏறக்குறைய இரு மடங்கு அதிகமாகி விட்டது. விண்ணப்பங்களை  பரிசீலிக்கவே பல மாதங்களாகி விடுகிறது. இதற்கிடையே, கொரோனா ஊரடங்கு காரணமாக இத்திட்டத்தின் கீழ் வீட்டு கட்டி உள்ளவர்கள் பலருக்கு இன்று வரை மத்திய அரசின் முழு தொகை வழங்கப்படவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

அனைத்து அலுவலகங்களுக்கும் முதன்மைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா உத்தரவிட்டு உள்ளார். அதில்

ஊரக வளர்ச்சி, டவுன் பஞ்சாயத்து துறைகளின் கீழ் வரும் அலுவலகங்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுகிறது. இன்று முதல் காலை 10.30 மணிக்குள் அரசு ஊழியர்கள் அலுவலகம் வர வேண்டும். நிலுவையில் உள்ள கோப்புகளை விரைந்து முடிக்க வேண்டும். ஊழியர்கள் சரியாக பணிக்கு வருவதை அறிக்கையாக தயாரித்து தினமும் பணியாளர், நிர்வாக  சீர்திருத்த துறைக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார். இதனைபோல், அனைத்து துறை அலுவலகங்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Next Story