மாநில செய்திகள்

திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு + "||" + Coronavirus Increase in Tiruvallur and Vellore Districts

திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு

திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பு
திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளது.
சென்னை 

திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 325 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,980 ஆக உயர்ந்துள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,282ஆக உயர்ந்து உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மேலும் 209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,131 ஆக உயர்ந்து உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,527 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 607 பேர் நோய் குணமாகி வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 907 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாவட்டம் முழுவதும்  8,185 பேர் வீட்டு தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா மரணங்களை விட ஊரடங்கால் மரணங்கள் அதிகம் இங்கிலாந்தில் ரகசிய ஆவண வெளியீடு
கொரோனா ஒரு பக்கம் கோரத்தாண்டவம் ஆடினாலும், மறுபக்கம் வெளியே தெரியாத மற்றொரு பிரச்சினை அமைதியாக மக்களைக் கொன்றுகொண்டிருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.
2. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதய பாதிப்பு ஏற்பட, வாய்ப்பு -ஆய்வில் தகவல்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதய பாதிப்பு ஏற்பட, சவாய்ப்புகள் உள்ளதாக, மருத்துவ ஆய்வு முடிவு ஒன்று தகவல் வெளியிட்டிருக்கிறது.
3. கொரோனா வைரஸ் என்பது இயற்கையாகவே தோன்றியது மீண்டும் வலியுறுத்தும் - உலக சுகாதார அமைப்பு
கொரோனா வைரஸ் என்பது இயற்கையாகவே நிகழ்ந்த ஒன்று என்று உலக சுகாதார அமைப்பு தலைவர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வெள்ளிக்கிழமை மீண்டும் வலியுறுத்தினார்.
4. செப்டம்பர் 26 : தமிழக கொரோனா பாதிப்பு முழு விவரம் மாவட்டம் வாரியாக
செப்டம்பர் 26 ந்தேதியில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழு விவரம் மாவட்டம் வாரியாக வருமாறு:-
5. உலகளாவில் தடுப்பூசிக்கு முன் கொரோனாஇறப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும் - உலக சுகாதார அமைப்பு
உலகளாவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு முன் கொரோனா பாதிப்பு இறப்பு எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டக்கூடும் என உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது..!