காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை ஐகோர்ட் அனுமதி


காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மதுரை ஐகோர்ட் அனுமதி
x
தினத்தந்தி 14 July 2020 12:33 PM IST (Updated: 14 July 2020 12:33 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாருக்கு 16ஆம் தேதி வரை சிபிஐ காவல் அளிக்கப்பட்டது

மதுரை

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு  கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜை காவலில் எடுக்க சிபிஐ  மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. சிபிஐ காவல் கோரிய மனு மீது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

சாத்தான்குளம் கொலை வழக்கில் 5 போலீசாரை விசாரிப்பது மிக முக்கியமான ஒன்று சிபிஐ சார்பில் வாதிடப்பட்டது. காவலில் எடுத்து விசாரிக்க கோருவது ஏன்? என சிபிஐ தரப்பு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது.

சிபிஐ காவலில் செல்வது குறித்து 5 போலீசாரிடமும் நீதிபதி தனித்தனியே கேட்டறிந்தார் 

சாத்தான்குளம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போலீசாரும் சிபிஐ காவலில் செல்ல ஒப்புதல் அளித்து உள்ளனர் மேலும் வழக்கறிஞர்கள் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என 5 போலீசாரும் கோரிக்கை வைத்து உள்ளனர்.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாருக்கு  16ஆம் தேதி வரை சிபிஐ காவல் அளிக்கப்பட்டது  சிபிஐ 5 நாள் அனுமதி கேட்ட நிலையில் 3 நாள் அனுமதி அளித்தது மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.

Next Story