சென்னையில் சாலையோர மரங்களில் விளம்பர பலகை; நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு

சென்னையில் சாலையோர மரங்களில் விளம்பர பலகை; நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 14 July 2020 3:18 PM IST (Updated: 14 July 2020 3:18 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் சாலையோர மரங்களில் விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சென்னை,

சென்னையில் சாலையோர மரங்களில் விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

சென்னையில் சாலையோரமுள்ள மரங்களில், விளம்பர பலகைகள் வைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது.  மரங்களில் ஆணி அடித்து விளம்பர பலகைகள் வைக்கப்படுவதால், மரத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.

இந்த மனு மீது சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற்றது.  இதில், சென்னையில் சாலையோர மரங்களில் விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.  இதுவரை நடவடிக்கை எடுத்தது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Next Story