தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடனும் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக் கூடாது என உத்தரவு


தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடனும் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக் கூடாது என உத்தரவு
x
தினத்தந்தி 14 July 2020 5:40 PM IST (Updated: 14 July 2020 5:40 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து விதமான கடன்கள் வழங்குவதை கூட்டுறவு வங்கிகள் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடனும் இன்று முதல் மறு உத்தரவு வரும்வரை வழங்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவிக் கடன், மத்திய கால கடன்கள் வழங்கப்பட்டு வந்தது. ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் செல்ல உள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை கடன் வழங்குவதை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story