மாநில செய்திகள்

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு + "||" + TN Cabinet meeting begains

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற  தமிழக அமைச்சரவை கூட்டம் நிறைவு
தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா தொற்று பரவல் சவாலாக இருக்கும் நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கூட்டப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் துவங்கியது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில்
 தமிழகத்தில் தொடங்கப்படவுள்ள புதிய தொழில்கள், பிறப்பிக்கப்பட வேண்டிய அவசர சட்டங்கள் மற்றும் கொரோனா தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய சிறப்பு பணி குறித்தும், ஊரடங்கு தளர்வுகள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை

தொடர்புடைய செய்திகள்

1. வீடு தேடிவரும் ரேஷன் பொருள்: 3,501 நகரும் நியாயவிலை கடை திட்டம்- எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் நகரும் நியாயவிலை கடை வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
2. டாஸ்மாக் தற்காலிக பணியாளர் ஓய்வு வயதை 59-ஆக உயர்த்தலாம் அரசு பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
டாஸ்மாக் தற்காலிக பணியாளர்களின் ஓய்வு வயதை 59 ஆக உயர்த்தலாம் என்றும் இது பற்றி பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது.
3. அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம்: தமிழக அரசு தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
தமிழக அரசு, அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற தன்னுடைய நிலையில் உறுதியாக இருக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
4. அங்கீகாரம் இல்லாத 71 கல்வியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி இல்லை -ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு
அங்கீகாரம் இல்லாத 71 கல்வியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி இல்லை என ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
5. கொரோனா பாதிப்பு: சிகிச்சையில் உள்ளவர்களை குறைத்து காட்டப்படுகிறதா... உண்மை நிலவரம் என்ன?
கொரோனா பாதிப்பில் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கையை தமிழக சுகாதாரத்துறை குறைத்து காட்டுகிறதா என்பது குறித்து உண்மை நிலவரம்