சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு - மத்திய மந்திரி தகவல்
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியிடப்படும் என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில், நேற்று முன்தினம் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு முடிவு வெளியானது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.
அந்த வகையில் தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) வெளியாகும் என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ‘சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை(இன்று) வெளியிடப்பட இருக்கிறது. அனைத்து மாணவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை cbs-e-r-esults.nic.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துக்கொள்ளலாம்.
Related Tags :
Next Story