தமிழகத்தில் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை :முதல்வர் பழனிசாமி


தமிழகத்தில் கூட்டுறவு  வங்கியில் நகைக்கடன் நிறுத்தப்படவில்லை :முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 15 July 2020 2:45 PM IST (Updated: 15 July 2020 2:45 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் உள்பட எந்த கடனும் நிறுத்தி வைக்கப்படவில்லை என்று முதல்வர் தெரிவித்தார்.

சென்னை,

கிருஷ்ணகிரியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு, தமிழகத்திற்கு ரூ.672 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் நிறுத்தி வைக்கப்படவில்லை.  அரசின் நிதி நிலமைக்கேற்ப தமிழக மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.  

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்க கூடுதலாக ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு தேவையான கவச உடைகள், உபகரணங்கள் போதிய அளவு வாங்கப்பட்டுள்ளன.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 11,919 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவில்  அதிக பரிசோதனகளை செய்யும் மாநிலம் தமிழகம் தான். சென்னை மாநகராட்சியில் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது.  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோய் பரவலை தடுக்க முடியும்” என்றார். 

Next Story