கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கோவை,
கோவை மாவட்ட ஆட்சியராக இருந்து வருபவர் ராசாமணி. கோவையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தியும், கட்டுப்பாடுகளை விதித்தும், அறிக்கைகளை வெளியிட்டும் வந்துள்ளார்.
இந்த நிலையில், அவருக்கு நேற்று உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார். இதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து, கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் அவருடன் பணிபுரிந்த ஊழியர்கள் உள்பட அனைவரும் தனிமைப்படுத்தும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story