சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு பாஜகவில் பதவி


சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு பாஜகவில் பதவி
x
தினத்தந்தி 15 July 2020 1:23 PM GMT (Updated: 2020-07-15T18:53:35+05:30)

சந்தனக்கடத்தல் வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு பாஜகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

சந்தனக் கடத்தல் வீரப்பன் கடந்த 2004-ம் ஆண்டு அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வீரப்பன் - முத்துலட்சுமி தம்பதிக்கு விஜயலட்சுமி, வித்யாராணி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் வித்யா ராணி வழக்கறிஞராக உள்ளார்.  இவர் சமீபத்தில் பாஜக  மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
 
இந்த நிலையில்,  வீரப்பனின் மகள் வித்யா ராணிக்கு பாஜகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  மாநில இளைஞர் அணி துணைத் தலைவராக வித்யா ராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Next Story