ஈரான் நாட்டில் சிக்கித்தவித்த 40 மீனவர்கள் இன்று தமிழகம் திரும்பினர் - அமைச்சர் ஜெயக்குமார்
ஈரான் நாட்டில் சிக்கித்தவித்த 40 மீனவர்கள் இன்று தமிழகம் திரும்பினர் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஈரானில் தவித்து வந்த தமிழக மீனவர்கள் 681 பேர் ஐ.என்.எஸ். ஜலஷ்வா கப்பல் மூலம் கடந்த ஜூலை 1 ஆம் தேதி பாதுகாப்பாக தமிழகம் திரும்பினர். அதனை தொடர்ந்து கப்பலில் இடம் இல்லாத காரணத்தால் தமிழக மீனவர்கள் 40 பேர், ஈரானிலேயே தவித்து வந்தனர்.
இதையடுத்து ஈரானில் சிக்கி தவித்த 40 மீனவர்களை தமிழகம் அழைத்து வர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது.
இந்நிலையில் தமிழக அரசு எடுத்த தொடர் நடவடிக்கையின் காரணமாக ஈரான் நாட்டில் சிக்கி தவித்த மீதமுள்ள 40 மீனவர்களும் இன்று தமிழகம் திரும்பினர் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். மேலும் அவர்கள் பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story