கூட்டுறவு வங்கிகளில் நிறுத்தி வைத்திருந்த கடன்களை மீண்டும் வழங்க உத்தரவு


கூட்டுறவு வங்கிகளில் நிறுத்தி வைத்திருந்த கடன்களை மீண்டும் வழங்க உத்தரவு
x
தினத்தந்தி 16 July 2020 2:13 PM IST (Updated: 16 July 2020 2:13 PM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு வங்கிகளில் நிறுத்தி வைத்திருந்த கடன்களை மீண்டும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கடன்கள் வழங்குவதை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால், அதுபோன்று எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று முதல்வர் பழனிசாமி, நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் கூறியிருந்தார்.  

இந்த நிலையில், கூட்டுறவு வங்கிகளில் நிறுத்தி வைத்திருந்த கடன்களை மீண்டும் வழங்க வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. அனைத்துவிதமான கடன்களையும் தங்கு தடையின்றி வழங்கவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 

Next Story