சென்னையில் 90 சதவீதம் பேர் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர்- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
சென்னையில் 90 சதவீதம் பேர் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர். ஆனால் இதுமட்டும் போதாது. அனைத்து மக்களும் மாஸ்க் அணிய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.
சென்னை:
சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக சுமார் ரூ.400 கோடி செலவிடப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைக்கு ரூ.200 கோடியும் களப்பணியாளர்களுக்கு உணவு வழங்க ரூ.30 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.
சென்னையில் 90 சதவீதம் பேர் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர். ஆனால் இதுமட்டும் போதாது. அனைத்து மக்களும் மாஸ்க் அணிய வேண்டும் என்பதுதான் மாநகராட்சியின் நோக்கம்.
சென்னையில் மட்டும் இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதிகளவில் பரிசோதனை செய்வதால் அதில் வரக்கூடிய தரவுகள் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
தற்போது 13 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்தாலும் 1,200 பேருக்குதான் கொரோனா என்ற நிலை உள்ளது என கூறினார்.
Related Tags :
Next Story