முருகன் அடியார்கள் காயப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - கவிஞர் வைரமுத்து
பெரியார் இழிவு செய்யப்படுவதைச் சகிக்க முடியாத எங்களால் முருகன் அடியார்கள் காயப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
சென்னை,
பிரதமர் மோடி அண்மையில் லடாக் சென்ற போது, திருக்குறளை மேற்கோள் காட்டி ராணுவ வீரர்களிடம் உரையாற்றினார். இதனிடையே, சி.பி.எஸ்.இ. பாடத்தை குறைக்கும்போது, திருக்குறள் நீக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் தங்கள் எதிர்ப்பையும், கண்டனத்தையும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதற்கு டுவிட்டர் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, திருக்குறளை மேற்கோள் காட்டுவதை பாராட்டும் எங்களால் அதை நீக்குவதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார்.
மேலும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இது குறித்து கவிஞர் வைரமுத்து, பெரியாரை இழிவு செய்யப்படுவதைச் சகிக்க முடியாது என்றும் அதே நேரம் முருகன் அடியார்கள் காயப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

திருக்குறள் மேற்கோள் காட்டப்படுவதைப்
— வைரமுத்து (@Vairamuthu) July 18, 2020
பாராட்டும் எங்களால் திருக்குறள் நீக்கப்படுவதை
ஏற்றுக்கொள்ள முடியாது.
பெரியார் இழிவு செய்யப்படுவதைச்
சகிக்க முடியாத எங்களால் முருகன் அடியார்கள்
காயப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.#Thirukkural#Tamil#Periyar
Related Tags :
Next Story