கல்வித்துறையின் அடுத்த முயற்சி 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பாடங்கள் வீடியோவாக பதிவு
1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பாடங்கள் வீடியோவாக பதிவு மேற்கொள்ளப்பட இருக்கிறது.
சென்னை,
பள்ளிக்கல்வி துறை இயக்குனர் ச.கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
பள்ளிக்கல்வித் துறையில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாக ஏற்கனவே பிளஸ்-2 வகுப்பு பாடங்களுக்கான வீடியோ படப்பதிவு மேற்கொள்ளப்பட்டு மின்பாடப்பொருள்களாக மாற்றப்பட்டு பள்ளிகளில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து பிளஸ்-1 வகுப்பு அனைத்து பாடங்களுக்கான வீடியோ பதிவு மேற்கொள்ளும்பணி நடைபெற்று வருகிறது.
மேலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான பாடப்பொருள்களுக்கான வீடியோ படப்பதிவு மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதற்காக குறிப்பிட்ட ஒரு ஆசிரியரை அனைத்து அலகுகளுக்கான படப்பதிவினை மேற்கொள்ள செய்யாமல் வெவ்வேறு ஆசிரியர்களை பயன்படுத்துதல் வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story