மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க மறுப்பதா? மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் கண்டனம்
மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க மறுப்பதா? என மத்திய அரசுக்கு, டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு கூறியிருப்பதும், அதற்காக மத்திய அரசு சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள காரணங்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இது கண்டிக்கத்தக்கது.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை மறுப்பதற்காக மருத்துவ கவுன்சில் விதிகளையும், பொருந்தாத நீதிமன்ற தீர்ப்புகளையும் காரணம் காட்டும் மத்திய அரசு, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான பொதுப்பிரிவில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு எந்த அடிப்படையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குகிறது?
அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும்படி சுப்ரீம் கோர்ட்டு எப்போது அனுமதி அளித்தது? உயர்கல்வி நிறுவனங்களின் பொது இடங்களில் அவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதற்கே இன்னும் சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளிக் காத நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்த சட்டம் வகை செய்கிறது?.
உயர்வகுப்பு ஏழைகளுக்கு ஒரு நீதி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இன்னொரு நீதி என்பது சமூக நீதி அல்ல. சமூக அநீதி. எனவே இனியும் தாமதிக்காமல், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு உடனடியாக அறிவிக்கவேண்டும். அதன்மூலம் இந்த சிக்கலுக்கு தீர்வு காணவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story