கோவை அருகே பயங்கரம் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை காதலை துண்டித்ததால் வாலிபர் வெறிச்செயல்
காதலை துண்டித்ததால் கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பேரூர்,
கோவை அருகே நடந்த இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவையை அடுத்த பேரூர் அருகே உள்ள ஆறுமுகக்கவுண்டனூர் எம்.ஆர். கார்டன் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். பால் வியாபாரி. இவருடைய மகள் ஐஸ்வர்யா (வயது 18). இவர் பேரூர் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ரித்தீஷ் (24) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அது, நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் செல்போன் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்த விவகாரம் ஐஸ்வர்யாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து மகளை கண்டித்த அவர்கள், காதலை கைவிட்டு, படிப்பில் கவனம் செலுத்துமாறு ஐஸ்வர்யாவிடம் கூறினர்.
பெற்றோரின் கண்டிப்பால் ஐஸ்வர்யா வேறு வழியின்றி, ரித்தீசுடனான காதலை துண்டித்தார். மேலும் அவரை சந்திப்பதையும் தவிர்த்து வந்தார்.
ஆனால் ரித்தீஷ், ஐஸ்வர்யாவுடன் எப்படியாவது பேசி காதலை புதுப்பிக்க பலமுறை முயற்சி செய்து வந்தார். அவர் போனில் தொடர்பு கொண்ட போதெல்லாம், ஐஸ்வர்யா அவருடன் பேசாமல் இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. காதலியின் இந்த மாற்றம் ரித்தீசுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இருப்பினும் இறுதிக்கட்ட முயற்சியாக நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு ஐஸ்வர்யாவின் வீட்டிற்கு சென்ற ரித்தீஷ், வீட்டின் வாசலில் நின்ற ஐஸ்வர்யாவிடம், என்னை ஏன் வெறுக்கிறாய் என்று கேட்டு தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தினார். ஆனால் அதற்கு ஐஸ்வர்யா மறுத்துவிட்டார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற ரித்தீஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஐஸ்வர்யாவின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதனால் வலிதாங்க முடியாமல் ஐஸ்வர்யா அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து சக்திவேல் வெளியே ஓடி வந்தார். அவர், ரித்தீசை தடுக்க முயன்றார். உடனே அவரையும் ரித்தீஷ் கத்தியால் குத்தினார். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
பின்னர், ரித்தீஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். கத்திக்குத்தில் காயம் அடைந்த சக்திவேல், மற்றும் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஐஸ்வர்யா ஆகிய 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்றுக்காலை ஐஸ்வர்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில், பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரித்தீசை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story