எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்


எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
x
தினத்தந்தி 19 July 2020 4:15 AM IST (Updated: 19 July 2020 4:02 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

சென்னை,

அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நேற்று ஈரோடு புறநகர் மாவட்டத்தை சேர்ந்த மாற்று கட்சியினர் பலர், அந்த கட்சிகளை விட்டு விலகி அ.தி.மு.க.வில் இணைந்தனர். அதன் விவரம் வருமாறு:-

ஈரோடு புறநகர் மாவட்டத்தை சேர்ந்த தாளவாடி ஊராட்சி ஒன்றியத்தின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.சாமப்பா, எம்.மகேஷ் மற்றும் கீதா சித்துராஜ். பைனாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.சதீஷ், ஆசனூர் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.சித்ரா சுப்பிரமணியம்.

அ.ம.மு.க.வை சேர்ந்த தாளவாடி ஒன்றியச் செயலாளர் ஏ.ஆர்.சுப்பிரமணியம், செயலாளர் சி.பிரகாஷ், ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளர் எஸ்.பாபு, தொழிற்நுட்பப் பிரிவு எஸ்.சிவா, நெய்தாளபுரம் ஊராட்சி செயலாளர் ஜி.சித்துராஜ், தலமலை ஊராட்சி செயலாளர் கே.வினை என்ற பிரசாத்.

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகரப் பகுதிகளைச் சேர்ந்த தி.மு.க. விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் எஸ்.ஆர்.பி.வெங்கிடுசாமி, ம.தி.மு.க. சத்தியமங்கலம் ஒன்றியச் செயலாளர் எஸ்.எஸ்.நடராஜ், அ.ம.மு.க. சத்தியமங்கலம் ஒன்றியச் செயலாளர் வி.எம்.திருமூர்த்தி, அ.ம.மு.க. மாவட்ட சிறுபான்மைப் பிரிவு மாவட்ட செயலாளர் சுஜித் என்ற சுநாயுல்லா, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம், சிக்கரசம்பாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி எம்.சக்திவேல்.

பவானி, அம்மாபேட்டை ஒன்றிய தி.மு.க. வர்த்தக அணி ஒன்றியச் செயலாளர் பாலுசாமி, அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் என்.மரகதம், கேசரிமங்கலம் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் பி.ஜெயந்தி தனபால்.

அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், மூங்கில்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் (காங்கிரஸ்) கே.எம்.விஸ்வநான் மற்றும் டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியம், புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சிமன்றத் தலைவர் பி.சேகர், அ.ம.மு.க.வை சேர்ந்த கணக்கம்பாளையம் ஊராட்சி கழக செயலாளர் கே.கே.பூபதி மற்றும் நஞ்சை புளியம்பட்டி ஊராட்சி கழக செயலாளர் கே.கே.பூபதி மற்றும் நஞ்சை புளியம்பட்டி ஊராட்சி கழக செயலாளர் வி.மோகன்ராஜ் ஆகியோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் இ.எம்.ஆர். ராஜா, சு.ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story