தொற்று புதிய உச்சம் தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிர் பலி ஒரே நாளில் 88 பேர் சாவு
தமிழகத்தில் கொரோனா உயிர் பலி அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்தனர். தொற்று பாதிப்பு நேற்று புதிய உச்சத்தை அடைந்தது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகள் கடந்த சில தினங்களாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 88 பேர் பலியாகி உள்ளனர். அதே போன்று தொற்று பாதிப்பும் 4 ஆயிரத்து 807 என்று புதிய உச்சத்தை தொட்டது.
இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் 47 ஆயிரத்து 179 பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பரிசோதனை முடிவில் 4 ஆயிரத்து 807 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் ஆண்கள் 2 ஆயிரத்து 907 பேரும், பெண்கள் 1,900 பேரும் அடங்குவர். வெளிநாடுகளில் இருந்து வந்த 17 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 59 பேர், 12 வயதுக்கு உட்பட்ட 260 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 601 முதியவர்களுக்கும் பாதிப்பு பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று அனைத்து மாவட்டங்களிலும் தொற்று கண்டறியப்பட்டது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,219 பேரும், திருவள்ளூரில் 370 பேரும், செங்கல்பட்டில் 323 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 4 பேரும், திருப்பத்தூரில் 3 பேரும் பாதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் இதுவரை 18 லட்சத்து 4 ஆயிரத்து177 பேருக்கு கொரோனாபரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 1 லட்சத்து 970 ஆண்களும், 64 ஆயிரத்து 721 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 23 பேரும் பாதிக்கப்பட்டனர். இதில் 12 வயதுக்கு உள்பட்ட 7 ஆயிரத்து 825 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 20 ஆயிரத்து 340 முதியவர்களும் அடங்குவர்.
தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அரசு மருத்துவமனையில் 64 பேரும், தனியார் மருத்துவமனையில் 24 பேரும் சிகிச்சையில் இருந்தவர்கள்.
உயிரிழப்பு பட்டியலில் சென்னையில் 31 பேரும், மதுரையில் 9 பேரும், திருவள்ளூரில் 7 பேரும், காஞ்சீபுரத்தில் 5 பேரும், வேலூர், தேனி, ராமநாதபுரத்தில் தலா பேரும், சேலம், தஞ்சாவூரில் தலா 3 பேரும், விருதுநகர், திருவண்ணாமலை, திண்டுக்கல், செங்கல்பட்டில் தலா இருவரும், கோவை, கன்னியாகுமரி, கரூர், நீலகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரத்தில் தலா ஒருவரும் இடம் பெற்றனர். இதுவரையில் 2,403 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனாவில் இருந்து 3 ஆயிரத்து 49 பேர் நேற்று குணம் அடைந்தனர். இதில் சென்னையில் 1,116 பேரும், திருவள்ளூரில் 243 பேரும் அடங்குவர். கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 856 ஆக அதிகரித்து உள்ளது. சிகிச்சையில் 49 ஆயிரத்து 452 பேர் உள்ளனர்.
தமிழகத்துக்கு வெளிநாடுகளில் இருந்து சிறப்பு விமானம் மூலம் வந்த 673 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 439 பேரும், ரெயில் மூலம் வந்த 424 பேரும், சாலை மார்க்கமாக வந்த 3 ஆயிரத்து 141 பேரும், கடல் மார்க்கமாக வந்த 34 பேர் என மொத்தம் 4 ஆயிரத்து 711 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story