2018-2019-ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் 31-ந்தேதியோடு நிறைவு


2018-2019-ம் ஆண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் 31-ந்தேதியோடு நிறைவு
x
தினத்தந்தி 20 July 2020 4:56 AM IST (Updated: 20 July 2020 4:56 AM IST)
t-max-icont-min-icon

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வருகிற 31-ந்தேதியோடு காலஅவகாசம் நிறைவடைகிறது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை,

வருமானவரி கணக்கு கடந்த 2018-2019-ம் நிதியாண்டுக்கான, வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், 2019 ஏப்ரல் மாதம் தொடங்கியது. ஆண்டுக்கு, ரூ.2½ லட்சம் உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமானவரி உச்சரவரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் என்பது, 2018-ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது. அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், மார்ச் 31-ந்தேதி உடன் முடிவடைந்தது. கொரோனா வைரஸ் தொற்று பரவால் காரணமாக, இந்த அவகாசம் ஜூலை 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது:-

வருமானவரி கணக்கு பொறுத்தவரையில் 2018-2019-ம் நிதியாண்டுக் கான, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும் 31-ந்தேதியுடன் நிறைவடைகிறது. மார்ச் மாதத்திற்கு பின், அபராதம் செலுத்தியும் கணக்கு தாக்கல் செய்ய முடியாது.

ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதற்குள் கணக்கு தாக்கல் செய்யத் தவறினால், மீண்டும் தாக்கல் செய்ய முடியாது. மேலும், 2019-2020-ம் நிதியாண்டின், அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நவம்பர் வரை வழங்கி வருமானவரித்துறை உத்தரவிட்டு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story