இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்திய காரணகர்த்தாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்திய காரணகர்த்தாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 July 2020 7:12 AM IST (Updated: 20 July 2020 7:12 AM IST)
t-max-icont-min-icon

இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு களங்கம் ஏற்படுத்திய காரணகர்த்தாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-

சென்னை தியாகராயர் நகர் செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில அடுக்குமாடி அலுவலகம், சில சமூக விரோதிகளால் களங்கப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தீய செயல் கடும் கண்டனத்திற்குரியது.

களங்கத்தை உண்டாக்கிய காரணகர்த்தாக்கள் யார் என்பதை உடனடியாகக் கண்டுபிடித்து அ.தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்திற்குப் புறம்பான இது போன்ற செயல்கள் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். அந்தக் கட்சிக்குத் தானே நடந்திருக்கிறது என்று இப்போது அலட்சியப்படுத்தினால், பின்னர் ஆளும்கட்சி உள்ளிட்ட எந்தக் கட்சிக்கும் இதுபோன்று நடந்துவிடக்கூடும் என்பதைச் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story