கீழடியில் அமைக்கப்படவுள்ள அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.


கீழடியில் அமைக்கப்படவுள்ள அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
x
தினத்தந்தி 20 July 2020 10:46 AM IST (Updated: 20 July 2020 10:46 AM IST)
t-max-icont-min-icon

கீழடியில் ரூ.12.25 கோடியில் அருங்காட்சியகத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.



சென்னை

கீழடி அகழாய்வில் தமிழ் நாகரிகத்தைச் சேர்ந்த பல தொன்மையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில், வடிகால் அமைப்புகள், சுடுமண் குழாய்கள், தமிழ் எழுத்துகள் பொறித்த பானைகள், எழுத்தாணிகள், சுடுமண் வார்ப்பு, பானை ஓடுகள், விளையாட்டுப் பொருட்கள், காதணிகள், தங்கம், உலோகப் பொருட்கள் என 2,600 ஆண்டுகள் புதைந்து கிடந்த ஆயிரக் கணக்கான பொருட்கள் கண்டறியப்பட்டன. 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச்23 ஆம் தேதியுடன் அகழாய்வு பணிகள் நிறுத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து, கடந்த 20 ஆம் தேதி முதல் மீண்டும் 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், கீழடியில் அமையவுள்ள அருங்காட்சியகத்துக்கு, தலைமை செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தமிழர் பெருமையினை பறைசாற்றும் வகையில் ரூ.12.25 கோடி செலவில் உலகத்தரத்தில் இந்த அருங்காட்சியகம் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story