கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பான விவகாரம்: மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு


கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பான விவகாரம்: மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
x
தினத்தந்தி 20 July 2020 1:03 PM IST (Updated: 20 July 2020 1:03 PM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக,  மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், அதற்கு தடை விதிக்கக்கோரியும், தமிழகத்தில் உள்ள நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் பழமையான இரு கூட்டுறவு வங்கிகள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வருவதற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்து மேலும் இவ்வழக்கு தொடர்பாக 4 வாரங்களில் பதில் அளிக்க மத்திய அரசு, ரிசர்வ் வங்கிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய அரசின் அவசர சட்டத்தால் உடனடி தாக்கம் ஏதும் இல்லாததால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை என்றும் கூட்டுறவு சங்க உரிமைகளில் தலையிடுவதாக இருந்தால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும் எனவும் சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.


Next Story