தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்


தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 20 July 2020 1:24 PM IST (Updated: 20 July 2020 1:24 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்:- 

"தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், விழுப்புரம், நாமக்கல், கரூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சோன மழையும் பெய்யும். 

அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் மேற்கு தொர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story