காஞ்சீபுரத்தில் 5,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு


காஞ்சீபுரத்தில் 5,000ஐ கடந்தது கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 20 July 2020 2:37 PM IST (Updated: 20 July 2020 2:37 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,029 ஆக உயர்ந்துள்ளது.

காஞ்சீபுரம்,

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.  தமிழகத்தில் ஒரே நாளில் 51 ஆயிரத்து 640 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4,979 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.  78 பேர் உயிரிழந்தனர்.  4,059 பேர் குணம் அடைந்தனர்.

தமிழகத்தில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக எண்ணிக்கையுடன் பாதிப்புகள் உள்ளன.  இதேபோன்று சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களான காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாதிப்புகள் அதிகரித்து உள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9,917 ஆக இன்று உயர்ந்து உள்ளது.  காஞ்சீபுரத்தில் இன்று ஒரே நாளில் 315 பேருக்கு புதியதாக கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  இதனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,029 ஆக உயர்ந்துள்ளது என காஞ்சீபுரம் சுகாதார துறை துணை இயக்குனர் மருத்துவர் பழனி தெரிவித்து உள்ளார்.

காஞ்சீபுரத்தில், கொரோனா பாதிப்புகளில் இருந்து இதுவரை 2,543 பேர் குணமடைந்துள்ளனர்.  66 பேர் உயிரிழந்துள்ளனர். 2,511 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story