எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெரியார் திராவிட கழகத்தினர் புகார் அளித்துள்ளனர்.
கோவை,
கோவையில் 3 கோவில்களில் அடுத்தடுத்து மர்ம நபர்கள் தீ வைத்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பா.ஜ.க. மற்றும் இந்து முன்னனி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் சேலத்தை சேர்ந்த கஜேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது, பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் என டுவிட்டர் மூலம் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்பிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரியார் திராவிட கழகத்தினர், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த வழக்கில் கைதான கஜேந்திரன், எந்த அமைப்பு மற்றும் எந்த கட்சியையும் சேர்ந்தவர் அல்ல என போலீசார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story