சென்னையில் கொரோனா தொற்று ஒரு வாரத்தில் 8 மண்டலங்களில் குறைவு; 7 மண்டலங்களில் அதிகரிப்பு - மாநகராட்சி தகவல்
சென்னையில் கொரோனா தொற்று ஒரு வாரத்தில் 8 மண்டலங்களில் குறைவாகவும் 7 மண்டலங்களில் அதிகரித்துள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் கடந்த ஒருவார கொரோனா பாதிப்பு விகிதம் குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரத்தில், திருவொற்றியூர் மண்டலத்தில் 2.7 சதவீதம், மாதவரத்தில் 3.4 சதவீதம், தண்டையார்ப்பேட்டையில் 1.9 சதவீதம், ராயபுரத்தில் 3.27 சதவீதம், அம்பத்தூரில் 0.9 சதவீதம், தேனாம்பேட்டையில் 2.8 சதவீதம், கோடம்பாக்கத்தில் 4 சதவீதம், வளசரவாக்கத்தில் 0.7 சதவீதம் என்று கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
அதே நேரத்தில் மணலி மண்டலத்தில் 3.7 சதவீதம், திரு.வி.க.நகரில் 8.4 சதவீதம், அண்ணாநகரில் 0.9 சதவீதம், ஆலந்தூரில் 5 சதவீதம், அடையாரில் 1 சதவீதம், பெருங்குடியில் 6.9 சதவீதமும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 1.9 சதவீதம் என்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த மண்டலங்களில் மேலும் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story