ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு


ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
x
தினத்தந்தி 21 July 2020 3:57 PM IST (Updated: 21 July 2020 3:57 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தர்மபுரி,

கர்நாடக மாநிலத்தில் தற்போது பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 7 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது,

இதனை தொடர்ந்து ஒகேனக்கல் அருவியில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால், கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். 

Next Story