மானநஷ்ட ஈடு கேட்டு பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கு - திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


மானநஷ்ட ஈடு கேட்டு பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கு - திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 21 July 2020 4:35 PM IST (Updated: 21 July 2020 4:35 PM IST)
t-max-icont-min-icon

ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கேட்டு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

பொள்ளாச்சியில் இளம்பெண்களை படமெடுத்து மிரட்டி, சில நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

அப்போது திமுக தலைவர் ஸ்டாலின், இந்த விவகாரத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனை சம்பந்தப்படுத்தி பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதனை தொடர்ந்து தமது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஸ்டாலின் செயல்படுவதாகக் கூறி, பொள்ளாச்சி ஜெயராமன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

எந்த ஆதாரமும் இன்றி குற்றம் சாட்டிய ஸ்டாலின் உள்ளிட்டோர் தனக்கு இழப்பீடு வழங்க கோரி நீதிமன்றத்தில் அவர் மனு அளித்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இது குறித்து ஸ்டாலின் தரப்பில் ஆகஸ்டு 18 ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Next Story