தமிழக அரசு இனியாவது மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்


தமிழக அரசு இனியாவது மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 July 2020 8:27 PM IST (Updated: 21 July 2020 8:27 PM IST)
t-max-icont-min-icon

மின் கட்டண உயர்வை எதிர்த்து கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து இனியாவது தமிழக அரசு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

ஊரடங்கு காலத்தில் பொதுமக்களிடம் அதிக அளவில் மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், மின் கட்டண அளவீட்டில் முறைகேடு இருப்பதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மேலும் மின் கட்டண உயர்வை கண்டித்து திமுக சார்பில் இன்று கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து தமிழக அரசு இனியாவது மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா நோய் ஒருபக்கம் விரட்டிகொண்டிருக்க, அதிமுக அரசு மின்கட்டணம் என்ற பெயரில் மக்களை மிரட்டி கொண்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மின்கட்டணம் உயர்த்தவில்லை என மின்துறை அமைச்சர் தங்கமணி பச்சை பொய் சொல்லி வருவதாக சாடியுள்ள ஸ்டாலின், அவர் செய்திகளை பார்ப்பதில்லையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது பேஸ்புக் பதிவில், திமுக சார்பில் நடத்தப்பட்ட கருப்புகொடி போராட்டத்தில் பொதுமக்களும் சேர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ள ஸ்டாலின், இதன்பிறகாவது மின்கட்டணத்தை குறைக்குமாறு அரசை கேட்டுகொண்டுள்ளார்.

Next Story